Offline
வரலட்சுமி திருமண வரவேற்பு நிகழ்ச்சி: மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்
Published on 07/05/2024 03:28
Entertainment

நடிகை வரலட்சுமி சரத்குமார் தமிழ் சினிமாவில் போடா போடி, சர்கார், சண்டக்கோழி 2, தாரை தப்பட்டை போன்ற பல படங்களில் கதாநாயகியாகவும், வில்லியாகவும் நடித்துஅவரது அபார நடிப்பு திறமையை வெளிப்படுத்தி மக்கள் கவனத்தை பெற்றார். தற்போது இவர் குணசத்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். அதைத்தொடர்ந்து தனுஷின் ராயன்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அதே சமயம் வரலட்சுமி சரத்குமாருக்கும் மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவுக்கும்திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. திருமணத்திற்கு பின்பு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. வரலட்சுமி – நிக்கோலாய் சச்தேவ் திருமண வரவேற்புதிருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Comments