Offline
ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி இணைந்து பாடிய ‘பனங்கருக்கா’ பாடல் வைரல்
Published on 07/07/2024 01:27
Entertainment

சின்னத்திரையில் அறிமுகமான நடிகர் போஸ் வெங்கட் பல படங்களில் குணசித்திர நடிகராக நடித்துள்ளார். 2020-ம் ஆண்டு ‘கன்னி மாடம்’ படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இந்த நிலையில் போஸ் வெங்கட் தற்போது நடிகர் விமல் நடித்துள்ள ‘சார்’ படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்துக்கு முதலில் ‘மா.பொ.சி’ (மாங்கொல்லை பொன்னரசன் சிவஞானம்) என்று படக்குழுவினர் பெயரிட்டு இருந்தனர். 

பின்னர் சில தவிர்க்க முடியாத காரணத்தினால் படத்தின் தலைப்பு ‘சார்’ என்று மாற்றப்பட்டது. எஸ்எஸ்எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ்ரூட் பிலிம் கம்பெனி நிறுவனம் வெளியிடுகிறது. சித்துகுமார் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு இனியன் ஜே ஹரிஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் முதல் பாடலான ‘பனங்கருக்கா’ பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார், சைந்தவி இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடலை பாடலாசிரியர் விவேகா எழுதியுள்ளார்.

Comments