தவறான மருத்துவ சிகிச்சைகளை சொல்கிறார் சமந்தா அதனால், அவர் சிறைக்கு செல்ல வேண்டும் என சமீபத்தில் மருத்துவர் ஒருவர் பரபரப்பைக் கிளப்பினார். இந்த சர்ச்சைகளுக்கு நடிகை சமந்தா விளக்கம் கொடுத்தார்.
மையோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகை சமந்தா அது தொடர்பான சிகிச்சை எடுத்து வருகிறார். மேலும், தான் எடுத்துக் கொள்ளும் சிகிச்சையைப் பற்றி சமூக வலைதளங்களில் வெளிப்படையாகவும் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது மூக்கில் நெபுலைசருடன் கூடிய புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்திருந்தார்.
வைரல் மருந்து எடுக்கும் முன்பு, நீங்கள் இந்த மாற்று வழியை முயற்சி செய்து பாருங்கள். ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் காய்ச்சி வடிகட்டிய நீர் ஆகியவற்றின் கலவையுடன் நெபுலைஸ் செய்யலாம்’ எனக் கூறியிருந்தார். இது தான் சர்ச்சைகளுக்கு வழிவகுத்தது.
சமூகவலைதளத்தில் ‘தி லிவர் டாக்’ என்ற ஐடியுடன் கூடிய மருத்துவர் ஒருவர் உடல்நலம் மற்றும் அறிவியல் குறித்த அறிவில்லாத ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை சமந்தா வைரஸ் தொற்றுகளுக்கு ஹைட்ரஜன் பெராக்சைடை சுவாசிக்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.
நான் தவறாக பரிந்துரைக்கிறேன். சிறைக்குச் செல்ல வேண்டும் என்று குற்றம் சாட்டிய மருத்துவரின் பதட்டத்தையும் அவரின் நல்ல நோக்கத்தையும் புரிந்து கொள்ள முடிகிறது. என்னுடைய மருத்துவரையும் அவரையும் அமர வைத்து கலந்துரையாடல் நடத்த வேண்டும். மற்றபடி, என்னுடைய நோக்கம் அடுத்தவர்களுக்கு உதவுவதே தவிர, காயப்படுத்துவது அல்ல!’ என்ற நீண்ட பதிவை பகிர்ந்துள்ளார்.