Offline
நடிகர் ஷாருக்கானுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
Published on 07/07/2024 01:32
Entertainment

சுவிட்சர்லாந்தில் உள்ள லோகார்னோவில் ஆண்டுதோறும் ‘லோகார்னோ திரைப்பட விழா’ நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் 77-வது திரைப்பட விழா வரும் ஆகஸ்ட் 7ஆம் தேதி  தொடங்கி 17ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த ஆண்டு திரைப்பட விழாவின் மிக உயரிய விருதான ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்குவழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2002இல் வெளியான தேவதாஸ் அவருக்கு பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இவரது நடிப்பில் கடந்த வருடம் வெளியான பதான், ஜவான் படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றன.

இந்த இரண்டு படங்களும் ரூ.1000 கோடி வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகஸ்ட் 11ஆம் தேதி நடைபெறும் இந்த விருது வழங்கும் விழாவில் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகி வரவேற்பைபெற்ற ‘தேவதாஸ்’ திரைப்படம் திரையிடப்பட உள்ளது. தொடர்ந்து ஷாருக்கான் உடனான ரசிகர்களின் கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

Comments