’ஜென் Z’ தலைமுறையின் சிக்கல்களை அலசி ஆராயும் புதிய தொடராக ‘பிரைம் டைம் வித் தி மூர்த்திஸ்’ ஒளிபரப்பாக இருக்கிறது.
எம் டிவி ஒரிஜினல்ஸ் தயாரிப்பில் ’பிரைம்டைம் வித் தி மூர்த்திஸ்’ ஓடிடி தொடர் நேற்று ஜியோ சினிமா ப்ரீமியமில் வெளியாகியுள்ளது.
90ஸ் கிட்ஸ், 2கே கிட்ஸ் பிரச்சனைகளை தாண்டி சமீப காலமாக அதிக பிரச்சினைகளை சந்தித்து வரும் ஜென் Z பிரிவினரின் நவநாகரீக வாழ்க்கை எப்படி உள்ளது. அவர்கள் சந்திக்கும் சவால்களை காமெடி கலந்த கருத்துள்ள தொடராக ரசிகர்களுக்கு இந்தத் தொடர் மூலம் வழங்க உள்ளது.
நவீன நகர்ப்புற குடும்பத்தின் லென்ஸ் மூலம் தற்கால இந்திய இளைஞர்களின் வாழ்க்கையை இந்த எம்டிவி ஒரிஜினல் தொடர் ஆய்வு செய்கிறது. ஜியோ சினிமா பிரீமியத்தில் மாலை ஆங்கிலம், இந்தி, கன்னடம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.
‘பிரைம் டைம் வித் தி மூர்த்திஸ்’ படத்தின் இயக்குநர் அரவிந்த் சாஸ்திரி, “உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு ‘பிரைம் டைம் வித் தி மூர்த்திஸ்’ கொண்டு வருவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த நிகழ்ச்சி வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல; இது வளர்ந்து வரும் இந்திய குடும்பத்தை பிரதிபலிக்கும் கண்ணாடி” என்றார்.
இந்தத் தொடரில் சுஷ்மா மூர்த்தியாக (அம்மா) சுகிதா ஐயர், மனோகர் மூர்த்தியாக (அப்பாவாக) ப்ரீதம் கோயில்பிள்ளை, நிஷா மூர்த்தியாக (மகள்) சஞ்சனா தாஸ், சிவ மூர்த்தியாக (மகன்) அம்ரித் ஜெயன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.