Offline
மஇகா தேர்தலில் வெற்றி பெற்ற உதவித் தலைவர்கள், மத்திய செயலவை உறுப்பினர்கள்
Published on 07/07/2024 23:11
News

மஇகாவின் தலைவராக டான் ஶ்ரீ விக்னேஸ்வரனும் உதவித்தலைவராக டத்தோ ஶ்ரீ சரவணனும் போட்டியின்றி வெற்றி பெற்ற வேளையில் உதவித் தலைவர் மற்றும் உதவித் தலைவர்கள், மத்திய செயலவை உறுப்பினர்களுக்காக  போட்டி நேற்று நடைபெற்றது.

இன்று அதிகாலை அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வழக்கறிஞர் செல்வா மூக்கையா அறிவித்தார்.  உதவித்தலைவர்கள் பதவிக்கு போட்டியிட்ட 4 பேரில் டத்தோ எம் அசோஜன் 8,633 வாக்குகளும், டத்தோ டி முருகையா 8,566 வாக்குகளும் டத்தோ நெல்சன் 8338 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர்.

21 மத்திய செயலவை உறுப்பினர்கள் பதவிக்கு 43 பேர் போட்டியிட்டனர்.  அதில் என்ரு டேவிட், தினாளன் ராஜகோபால், ரவீன் குமார் கிருஷ்ணசாமி, டத்தோ ஏ கே ராமலிங்கம், டத்தோ சுப்பிரமணியம் கருப்பையா, டத்தோ ஜி சிவா, பி கமலநாதன், டத்தோ எஸ் தமிழ்வண்ணன், வின்செண்ட், எல். சிவசுப்ரமணியம், ஜி.ராமன், ஆர்.கே. ராஜசேகரன், டத்தோ எஸ். ஆனந்தன், டத்தோ வி. குணாளன், டத்தோ என். கருப்பண்ணன், டத்தோ முனியாண்டி, டத்தோ ஆர்.சுப்ரமணியம், டாக்டர் டி.நோவளன், டத்தோ எஸ்.எம்.முத்து, குணசீலன் ராஜு, டி.தர்மகுமாரன் ஆகியோர் மத்திய செயலவை உறுப்பினர்களாக வெற்றி பெற்றுள்ளனர்.

Comments