Offline

LATEST NEWS

12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம்
Published on 07/10/2024 00:07
News

12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக மாற்றான் தந்தை, மகன் மற்றும் அவரது நண்பர் மீது குற்றச்சாட்டு.

கோத்தா பாரு:

12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக அச்சிறுமியின் மாற்றான் தந்தை, 46 , அவரது 22 வயது மகன் மற்றும் மகனின் நண்பர் ஆகிய 3 பேர் மீது செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்பட்டது.

தனித்தனியாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று சந்தேக நபர்களுக்கும் எதிரான குற்றச்சாட்டு நீதிபதி சுல்கிப்லி அப்துல்லா முன்நிலையில் வாசிக்கப்பட்ட பின்னர், அவர்கள் தாங்கள் குற்றமற்றவர்கள் என்று கூறி, விசாரணை கோரினர்.

இவ்வழக்கின் முதல் குற்றவாளியானசிறுமியின் மாற்றான் தந்தையான வர்த்தகர், இந்த ஆண்டு மே 18 முதல் 22 வரை பெரிஸ் தெங்கா குபுர் பெசார், பச்சோக்கில் உள்ள ஒரு வீட்டில் குற்றத்தைச் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார். இது குற்றவியல் சட்டத்தின் (சட்டம் 574) பிரிவு 376 (3) இன் கீழ், குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் சட்டம் 2017 (சட்டம் 792) பிரிவு 16 உடன் சேர்த்து படிக்கப்பட்டது. இது குற்றம் நிரூபிக்கப்பட்டால் 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் குறைந்தபட்சம் 10 பிரம்பு அடி விதிக்க வழிசெய்யும் 

Comments