Offline
டிஏபி மீது சீனர்கள் நம்பிக்கை இழக்கிறார்களா? பேராசிரியர் ராமசாமி கேள்வி
News
Published on 07/10/2024

சுங்கை பாக்காப் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் சீன வாக்காளர்கள் குறைந்த எண்ணிக்கையில் தான் வாக்களித்தது குறித்து அம்னோவின் தேசிய மூத்தோர் கிளப் (NVC) கலக்கமடைந்துள்ளதுஎன்று உரிமை கட்சியின் அமைப்புத் தலைவர் பேராசிரியர் டாக்டர் ப.ராமசாமி கூறினார்.

இத்தொகுதியில் 22 விழுக்காடு சீன வாக்காளர்கள் உள்ளனர். டிஏபி தலைவர்கள் சீன வாக்காளர்களை கவர்வதில் தோல்வி கண்டிருக்கின்றனர். இது கவலை அளிப்பதாக உள்ளது என்று அதன் தலைவர் டத்தோ முஸ்தபா யாக்கோப் வருத்தம் தெரிவித்தார்.

2024, ஜுலை 6 ஆம் தேதி நடந்த வாக்களிப்பின் போது, ​​சுமார் 47 விழுக்காடு சீன வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்க வந்தனர்.

இவர்களுல் பெரும்பான்மையானவர்கள் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு வாக்களித்தாலும், சிலர் விரக்தியில் பெரிக்காத்தான் நேஷனலுக்கு வாக்களித்திருக்கலாம்.

மலாய்க்காரர்கள் 70 விழுக்காடும் இந்தியர்கள் 57 விழுக்காட்டினரும் வாக்களித்தனர்.

ஒருவேளை, சீன வாக்காளர்களை திரட்டுவதில் டிஏபி சிறப்பான பங்கை ஆற்றவில்லை ஆனால் அதே நேரத்தில், பொதுவாக ஆளும் கூட்டணிக்கு சீனர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப்தி டிஏபி-க்கான ஆதரவில் சரிவு ஏற்படுவதற்கு காரணமாக இருக்கலாம்.

ஜசெக அல்லது பக்காத்தான் ஹராப்பான் தலைமையிலான கூட்டணிக்கு அரசியல் மாற்று இல்லை என்று சீனர்கள் நினைக்கலாம்.

எனினும், நாட்டில் தங்களுக்குத் தேவையானவை சரிவர கிடைக்கவில்லை என்பதில் அவர்கள் அதிருப்தியாக உள்ளனர் என்று பேராசிரியர் ராமசாமி தெரிவித்தார்.

டிஏபி தலைவர்கள் ஒரு காலத்தில் சீன கலாச்சாரம், மொழி உரிமைகளுக்காக உரக்க குரல் எழுப்பியவர்கள்; போராடியவர்கள். இருப்பினும், அத்தகைய சூழ்நிலை தற்போது இல்லை.

 

Comments