பெட்டாலிங் ஜெயா:
இன்று காலை நாடாளுமன்றத்தில் நடந்த கேள்வி -பதில் (MQT) அமர்வின்போது போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் சியூ ஃபூக்கிற்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
வோங் சென் (PH-Subang) கேட்ட கேள்விக்கு அவர் எழுந்து நின்று, பதிலளிக்க முயன்றபோது, லோக் மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாகத் தோன்றியது என்று நாடாளுமன்ற வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
A/A1 லைசென்ஸ் வைத்திருக்கும் ஊனமுற்ற ஓட்டுநர்களை இ-ஹெய்லிங் ஓட்டுநர்களாகப் பணிபுரிய அனுமதிப்பது தொடர்பான விதிமுறைகள் குறித்து, வோங்கின் கேள்விக்கு லோக் பதிலளிக்க வேண்டும், அப்போது லோக் தனது பலமுறை மார்பைத் தட்டியதுடன் தனக்கு மூச்சுவிட சிரமமாக இருப்பதை உணர்த்தி, துணைப் போக்குவரத்து அமைச்சர் டத்தோ ஹஸ்பி ஹபிபொல்லாவை, தான் நிறுத்திய இடத்திலிருந்து தொடருமாறு சமிக்ஞை செய்தார்.
அமர்வை ஹபிபுல்லா பொறுப்பேற்றதும், லோக் உட்கார்ந்தார், இதன்போது நாடாளுமன்றத்தில் சற்று பதற்றம் நிலவியது குறிப்பிடத்தக்கது.