Offline

LATEST NEWS

மலேசியப் பிரதமராக இருமுறை பதவி வகித்த டாக்டர் மகாதீர் இன்று 99 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்
Published on 07/11/2024 00:58
News

கோலாலம்பூர்:

இரண்டு முறை மலேசியாவின் பிரதமராக பதவி வகித்தவரும் நாட்டில் பல அபிவிருத்தியை மேற்கொண்டவருமான முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் இன்று தனது 99வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

டாக்டர் மகாதீர் கெடாவின் தலைநகரான அலோர் ஸ்டாரில் 1925 இல் இந்த தேதியில் பிறந்தார்.

கடந்த 2018-ஆம் ஆண்டில் இரண்டாம் முறையாக மீண்டும் மலேசியாவின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, உலகின் மிக வயதான பிரதமர் என்ற சாதனையையும் தமக்குரியதாக்கினார் என்றால் மிகையாகாது.

மேலும் டாக்டர்.M என அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் அவரது நீண்ட ஆயுட்காலம் பெரும்பாலும் அவரது பல நேர்காணல் கேள்விகளின் தலைப்பாக இருந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

வயது ஒரு எண் என்பதற்கு வாழும் உதாரணாமாக இன்றுவரை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் சுறுசுறுப்பாக இருக்கும் அவருக்கு மக்கள் ஓசை இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

Comments