Offline
ஆப்பிரிக்காவிலும் காலூன்றுகிறது AirAsia
News
Published on 07/11/2024

கோலாலம்பூர்:

ஆப்பிரிக்கக் கண்டத்திலுள்ள கென்யா நகருடன் மலேசியாவை இணைப்பதற்காக AirAsia விமான நிறுவனம் புதிதாகச் சேவை ஒன்றை அறிவித்துள்ளது.

நைரோபி நகருடன் மலேசியாவை இணைக்கும் இந்தச் சேவை, நவம்பர் 15ஆம் தேதியன்று தொடங்கப்படவுள்ளது.

அழகிய தாவரங்களையும் வனவிலங்குகளையும் காண்பதற்காக உலகெங்கிலிருந்தும் வரும் சுற்றுப்பயணிகள், நவீன வசதிகள் நிறைந்த நகரங்களிலும் இளைப்பாறி பொழுதைக் கழிக்கலாம்.

மில்லியன்கணக்கான வரிக்குதிரைகள், ‘கெஸல்’ மான்கள், ‘வில்டபீஸ்ட்’ மாடுகள் உள்ளிட்ட வினோத விலங்குகளைக் காண்பதற்கு ‘மாசாய் மாரா’ தேசியக் காப்பகம், ஆப்பிரிக்காவின் இரண்டாவது ஆக உயர மலையான மவுன்ட் கென்யா, யுனெஸ்கோ உலக மரபுடைமைத் தளமான லாமூ தீவு, சொகுசு ஹடியானீ பீச் எனப் பல்வேறு கண்கவர் தலங்கள் பயணிகளுக்காகக் காத்திருக்கின்றன.

அம்போசலி தேசிய பூங்காவில் யானைக்கூட்டம். படம் ராய்ட்டர்ஸ்

ஆசியாவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் இடையிலான இந்த புதிய பயணப் பாதையை அறிமுகம் செய்ய ஏர்ஏஷியா ஆர்வத்துடன் இருப்பதாக ஏர்ஏஷியாவை இயக்கும் கேப்பிடல் ஏ நிறுவனத்தின் தலைமை நிர்வாகி டோனி ஃபெர்னாண்டஸ், ஜூலை 2ஆம் தேதியன்று கோலாலம்பூரிலுள்ள ஏர்ஏஷியா தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

“இதன்மூலம், சுற்றுப்பயணத் துறை மட்டுமின்றி வணிகமும் பெருக வாய்ப்புள்ளது. உலகில் மலிவு கட்டண விமானச் சேவைக்கான மையமாக கோலாலம்பூரைத் திகழச் செய்ய வேண்டும் என்பதே எங்கள் கனவு,” என்று ஃபெர்னாண்டஸ் கூறினார்.

Comments