Offline
லண்டனில் தேசிய விருது வென்ற கேப்டன் மில்லர்
Published on 07/12/2024 04:05
Entertainment

தனுஷ் மற்றும் அருண் மாதேஸ்வரன் கூட்டணியில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் கேப்டன் மில்லர். வரலாற்றுப் பின்னணியில், ஆங்கிலேயர் காலகட்டத்தில் நடக்கும் கதையை மையப்படுத்திய இந்த படத்தில், தனுஷ், பிரியங்கா மோகன் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் உட்பட பல முன்னணிநட்சத்திரங்கள் முக்கிய பாத்திரங்களில் இணைந்து நடித்திருந்தனர்.

இந்நிலையில், ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் 10வது லண்டன் தேசிய விருதுக்கான ‘சிறந்தவெளிநாட்டுத் திரைப்படம்’ என்ற பிரிவில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் சில நாட்களுக்கு முன் அறிவித்து இருந்தது. தற்பொழுது சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம் விருதை கேப்டன் மில்லர் வென்றுள்ளது.

இச்செய்தியை நன்றியுடன் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  படத்தின் தயாரிப்பாளரான சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனமும் அவரது எக்ஸ் தள பக்கத்தில் இந்த மகிழ்ச்சியானதருணத்தை பகிர்ந்துள்ளார். படத்தில் வேலை செய்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துள்ளார்.

Comments