Offline
விரைவுச்சாலையில் விபத்து: 3 இந்திய பிரஜைகள் பலி – வங்கதேசத் தொழிலாளி காயம்
News
Published on 07/14/2024

ஷா ஆலம்: வட கிள்ளான் பள்ளத்தாக்கு விரைவுச்சாலையில் (NKVE) கார் மோதியதில் வங்கதேசத் தொழிலாளி ஒருவர் காயமடைந்த நிலையில், மூன்று ஆண் இந்திய ஒப்பந்தத் தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். ஷா ஆலாம் OCPD உதவி  ஆணையர் முகமட் இக்பால் இப்ராஹிம் கூறுகையில், சனிக்கிழமை (ஜூலை 12) அதிகாலை 3.30 மணியளவில் விபத்து நடந்ததாகக் கூறினார்.

டாமன்சாரா திசையில் இருந்து வலது பாதையில் ஓட்டிச் சென்ற ஒரு நபர், தண்ணீர் தடுப்பு மற்றும் டிவைடரில் மோதியதற்கு முன்பு தனது கட்டுப்பாட்டை இழந்ததாக  ஆரம்ப விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவத்தில் பராமரிப்பு பணியில் இருந்த மூன்று இந்திய பிரஜைகள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். காயமடைந்த வங்கதேச தொழிலாளி  சிகிச்சைக்காக ஷா ஆலம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

சாரதியான 20 வயதுடைய நபர் மேலதிக விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். அவர் குடி போதையில் இருந்தாரா என்பதும் ஆராயப்பட்டு வருகிறது. சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987ன் பிரிவு 41(1)ன் கீழ் விசாரணை நடத்தி வருகிறோம் என்றார் அவர்.ஏசிபி முகமட் இக்பால், தகவல் அறிந்தவர்கள், போக்குவரத்து புலனாய்வு அதிகாரி ராஜா மகாதி ராஜா மஹ்முதீனை 012-3097660 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

Comments