Offline

LATEST NEWS

மனதிற்கினிய நண்பர் கவிப்பேரரசு வைரமுத்து- கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து
Published on 07/14/2024 01:04
Entertainment

தமிழ் திரையுலகில் மட்டும் இல்லாமல் தமிழ் இலக்கியம், பண்பாடு ஆகிய தளங்களில் மிகவும் முக்கியமான ஆளுமையாக விளங்கி வருபவர் கவிப்பேரரசு என அழைக்கப்படும்வைரமுத்து. 1953ஆம் ஆண்டு பிறந்த இவர் இன்று அதாவது ஜூலை 13ஆம் தேதி தனது 71வது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார். இவருக்கு அவரது ரசிகர்கள் திரைப்பிரபலங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நான்கு தசாப்தங்களுக்கு மேலாக தமிழ் திரையுலகில் தனது பாடல் வரிகளால் மக்களை மகிழ்வித்து வரும் கலைஞன் ஆக இருக்கும் கவிப்பேரரசு வைரமுத்து, காலத்துக்கு ஏற்ப தன்னை புதுப்பித்து கொள்ளும் கவிஞன் ஆகவும் ஜொலிக்கிறார்.

இந்நிலையில்நடிகர் கமல்ஹாசன் வாழ்த்தை தனது எக்ஸ் தளபக்கத்தில் தெரிவித்து அதில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் மனதிற்கினிய நண்பர், கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள்பல்லாண்டு வாழ மனதார வாழ்த்தி மகிழ்கிறேன் என்று கூறியுள்ளார்.

Comments