Offline

LATEST NEWS

குலுங்கியது கனடா.. சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவு..
Published on 07/14/2024 01:20
News

ஒட்டாவா: கனடாவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதல் மக்கள் பீதியில் உறைந்தனர். நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்த தகவலும் கிடைக்கவில்லை.

வட அமெரிக்க நாடுகளில் ஒன்று கனடா. இந்த நிலையில் கனடாவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கனடாவின் வான்கவுர் தீவில் உள்ள குட்டி நகரமான டோபினோவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடற்கரையை ஒட்டிய இந்த பகுதியில் ரிக்டர் அளவில் 6.2 ஆக நிலநடுக்கம் பதிவானது.

நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதல் மக்கள் பீதியில் உறைந்தனர். சக்தி வாய்ந்த இந்த நிலநடுக்த்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்த தகவலும் கிடைக்கவில்லை.

Comments