Offline
பிரசாந்த் நடித்துள்ள அந்தகன் படத்தின் முதல் பாடலை வெளியிடும் விஜய்!
Published on 07/22/2024 16:31
Entertainment

பாலிவுட்டில் வெளியான அந்தாதூன் என்ற படத்தை தமிழில் அந்தகன் என்ற பெயரில் ரீமேக் செய்திருக்கிறார் நடிகர் தியாகராஜன்.

பிரசாந்த் கண் பார்வை இல்லாத மாற்றுத்திறனாளி வேடத்தில் நடித்திருக்கும் இந்த படத்தில் அவருடன் கார்த்திக், சமுத்திரக்கனி, சிம்ரன், பிரியா ஆனந்த், ஊர்வசி, யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி திரைக்கு வரும் இந்த படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் அந்தகன் படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியாக இப்படத்தின் முதல் பாடலை நடிகர் விஜய்யை வெளியிட வைப்பதற்கு திட்டமிட்டுள்ளார்கள்.

Comments