Offline
விடாப்பிடியாய் இருந்த ஜோ பைடன்.. திடீரென மனம் மாறியது ஏன்? பின்னணியில் என்ன நடந்தது?
News
Published on 07/23/2024

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த ஜோ பைடன், திடீரென்று தனது முடிவை மாற்றி போட்டியில் இருந்து விலகினார். ஜோ பைடன் விலகியதற்கு கட்சியினர் கொடுத்த கடுமையான அழுத்தமே காரணம் என்று சொல்லப்படுகிறது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் திடீர் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக மீண்டும் களம் இறங்கி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த ஜோ பைடன் திடீரென போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஜோ பைடனின் இந்த திடீர் அறிவிப்பு ஜனநாயக கட்சியினருக்கே பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது.

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வரும் ஜோ பைடன் சனிக்கிழமை இரவு வரை அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகப் போவது இல்லை என விடாப்பிடியாய் கூறி வந்து இருக்கிறார். ஆனால், ஒரே நாளில் தனது முடிவை தலைகீழாக மாற்றிய பைடன் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்ததோடு, அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிசையும் முன்மொழிந்து இருக்கிறார்.

ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளரில் இருந்து திடீரென விலகியிருப்பதால் மீண்டும் ஜனநாயக கட்சியினர் கூடி புதிய அதிபர் வேட்பாளரை தேர்வு செய்ய இருக்கிறார்கள். பெரும்பாலும் கமலா ஹாரிஸ்க்கே இதில் வாய்ப்பு அதிகம் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஜனநாயக கட்சியினர் தொடர்ந்து அழுத்தம் கொடுத்துக் கொண்டு இருக்க குடும்ப உறுப்பினர்களும் ஜோ பைடனுக்கு போட்டியில் இருந்து விலக அழுத்தம் கொடுத்து இருக்கிறார்கள்.

இது போக முன்னாள் அதிபர் ஒபாமா, முன்னாள் சபாநாயகர் நான்சி பெலோசி ஆகியோரும் கடும் அழுத்தம் கொடுத்து வந்தனர். அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் 25 பேர் ஜோ பைடன் அதிபர் தேர்தலில் இருந்து விலக வேண்டும் என்று வெளிப்படையாக கூறினர். இதனால், அடுத்தடுத்து எதிர்ப்பு கிளம்பிய நிலையில், கொரோனா தொற்று காரணமாக தனது டெலாவர் இல்லத்தில் தனிமையில் ஓய்வு எடுத்து வந்த ஜோ பைடன் போட்டியில் இருந்து விலகும் முடிவை எடுத்து இருக்கிறார்.

Comments