Offline
கிள்ளான் பள்ளத்தாக்கு நீர் விநியோகத்தடை ; 31.9 விழுக்காடு சீரடைந்தது
News
Published on 07/25/2024

கோலாலம்பூர்:

இன்று பிற்பகல் 3:00 மணி நிலவரப்படி, சுங்கை குண்டாங் மற்றும் சுங்கை செம்பாவில் துர்நாற்றம், மாசுபாடு ஏற்பட்டதன் காரணமாக ரந்தாவ் பன்ஜாங், SSP1, SSP2 மற்றும் SSP3 WTPகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் நீர் வழங்கல் மீட்பு 31.9% ஐ எட்டியுள்ளது.

மருத்துவமனைகள், கிளினிக்குகள், டயாலிசிஸ் மையங்கள் மற்றும் இறுதிச் சேவை மையங்கள் போன்ற முக்கியமான வளாகங்களுக்கு ஆயிர் சிலாங்கூர் தண்ணீர் டேங்கர்களைத் தொடர்ந்து அனுப்பும் என்றும், 17 உள்ளூர் சேவை மையங்களில் மாற்று நீர் வழங்கல் உதவியும் வழங்கப்பட்டுள்ளது என்றும் அது தெரிவித்துள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்குள் நீர் விநியோகம் முற்றிலுமாக சீரடைந்து நீர் விநியோகம் வழக்கு நிலைக்கு திரும்பும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது 

Comments