Offline
‘கோட்’ படத்தின் முற்பாதியைப் பார்த்துவிட்டு இயக்குநரிடம் விஜய் கூறியது இதுதான்
Published on 07/27/2024 06:26
Entertainment

வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘கோட்’ திரைப்படத்தின் தயாரிப்புக்குப் பிந்திய பணி விரைவாக நடைபெற்று வருகிறது. இந்தியா முழுவதும் செப்டம்பர் 5ஆம் தேதி இப்படம் வெளியாகவிருக்கிறது.

இணையத்தில் வலம்வரும் செய்திகளின்படி, இப்படத்தின் முற்பாதி தயாராக இருப்பதாகவும் விஜய் அதைப் பார்த்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

அதன் வெளிப்பாடு குறித்து விஜய் மகிழ்வதாகவும் அதைப் பார்த்துவிட்டு வெங்கட் பிரபுவிடம் ‘தெறிக்குது’ என அவர் கூறியதாகவும் சொல்லப்படுகிறது.

இந்தத் தகவல் பரவியதைத் தொடர்ந்து, ‘கோட்’ படம் குறித்து ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் கூடியுள்ளது.

Comments