Offline
Vikram: பிதாமகன், ஐ, ராவணன் படங்கள் வெறும் 3%தான்.. தங்கலான் படத்திற்காக அதிகமாக உழைத்த விக்ரம்!
Entertainment
Published on 07/27/2024

சென்னை: நடிகர் விக்ரம் தொடர்ந்து பல ஆண்டுகளாக ஏராளமான ரசிகர்களை தன்னுடைய படங்களால் கட்டிப்போட்டு வருகிறார். விக்ரம் என்றாலே வித்தியாசம் என்பதற்கு இணங்க ஒவ்வொரு படத்திலும் வித்தியாசத்தை கொடுத்து வருகிறார். அந்த வகையில் விக்ரம் நடிப்பில் ஐ, பிதாமகன், ராவணன் படங்கள் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தன.

இந்நிலையில் அடுத்ததாக பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள தங்கலான் படமும் ரசிகர்களை கண்டிப்பாக கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் பாடல் உள்ளிட்டவை அடுத்தடுத்து வெளியாகி ஏராளமான ரசிகர்களின் ஆவலை தாறுமாறாக தூண்டியுள்ளது.

தங்கலான் படம்: இந்நிலையில் அடுத்ததாக பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார் விக்ரம். இந்த படம் கடந்த ஏப்ரல் மாதத்திலேயே ரிலீசாகவிருந்த சூழலில் தற்போது படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தை ஒட்டி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் அடுத்தடுத்த ப்ரோமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட திட்டமிட்டுள்ளனர். சென்னை உள்ளிட்ட தென்னிந்திய தென்னிந்தியாவின் சில இடங்களிலும் மும்பையிலும் மற்றும் வெளிநாட்டிலும் இந்த படத்தின் ப்ரோமோஷன்களை மேற்கொள்ள படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தின் ட்ரெயிலர் முன்னதாக வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்த நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பு தாறுமாறாக எகிறியுள்ளது.

Comments