கோலாலம்பூர்: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சனிக்கிழமை (ஜூலை 27) இரவு தேசிய மைதானமான புக்கிட் ஜலீலில் “ஏஆர் ரஹ்மான்: லைவ் இன் கோலாலம்பூர் 2024” இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். புகழ்பெற்ற இந்திய இசையமைப்பாளரும் இசைத் தயாரிப்பாளருமான ஏ.ஆர்.ரஹ்மான் பங்கேற்ற இந்நிகழ்ச்சி ஆயிரக்கணக்கான தமிழ் இசை ரசிகர்களை ஈர்த்தது.
அன்வாருடன் துணை தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சர் டத்தோ ஆர் ரமணன் உடன் இருந்தார். தமிழ்ப் பாடல்களின் மீதுள்ள காதலுக்குப் பெயர் பெற்ற அன்வார், ரமணனுடன் கச்சேரியை மகிழ்ச்சியுடன் ரசித்துக் கொண்டிருந்தார்.
ரஹ்மான் மலேசியர்களுக்கு புதியவர் அல்ல, 1996 இல் மலேசியாவில் ஷா ஆலம் ஸ்டேடியத்தில் முதன்முதலில் இசை நிகழ்ச்சி நடத்தினார். 2023 இல் அவரது கச்சேரியில் அவர் 60,000 க்கும் மேற்பட்டோர் குழுமியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.