Offline
ஒலிம்பிக்கில் பங்கேற்க 2 நாடுகளுக்கு தடை: ஒன்னு ரஷ்யா.. மற்றொரு நாடு எது?
Entertainment
Published on 08/01/2024

பாரிஸ் ஒலிம்பிக் தொடரானது, நேற்று நள்ளிரவு 11 மணி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. வரலாற்றில் முதல்முறையாக, துவக்க விழாவானது மைதானத்தில் நடைபெறாமல், பொதுவான இடத்தில் செய்ண் நதிக்கரை ஓரத்தில் நடைபெற்றது.

ஜூலை 26ஆம் தேதி துவங்கிய இந்த, பாரிஸ் ஒலிம்பிக் தொடரானது ஆகஸ்ட் 11ஆம் தேதிவரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து 117 வீரர், வீராங்கனைகள் இத்தொடரில் பங்கேற்றுள்ளனர். ஈட்டி எறிதல், குத்துச்சண்டை, பழு தூக்குதல், பேட்மிண்டன், துப்பாக்கி சுடுதல், ஹாக்கி போன்ற விளையாட்டுகளில் இந்தியாவுக்கு பதக்கங்கள் கிடைக்கும் என அதிக எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளது.

எத்தனை நாடுகள்:

பாரிஸ் ஒலிம்பிக் தொடருக்கு, மொத்தம் 206 ஒலிம்பிக் நாடுகள் கமிட்டி பங்கேற்றுள்ளது. இதில், அகதிகள் ஒலிம்பிக் அணியும் அடங்கும். மொத்தம் 10500-க்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் 205 விதமான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். இந்தாண்டு பிற்பகுதியில் நடைபெறவுள்ள பாரா ஒலிம்பிக் தொடரில் 4,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பார்கள்.

2 நாடுகளுக்கு தடை:

பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க இரண்டு நாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபடுவதால், ரஷ்யாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவுக்கு ஆதரவாக இருந்து, உக்ரன் போருக்கு உதவும் பெலாரஸ் நாட்டிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தாண்டு பிற்பகுதியில் நடைபெறவுள்ள பாரா ஒலிம்பிக்கிலும் இந்த நாட்டை சேர்ந்த வீரர், வீராங்கனைகளும் பங்கேற்க வாய்ப்பில்லை.

பாரிஸ் ஒலிம்பிக் துவங்குவதற்கு, ஒரு வாரத்திற்கு முன் அமைதிப் பேச்சு வார்த்தையை ரஷ்யா துவங்க வேண்டும் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி நிபந்தனை விதித்து இருந்தது. ஆனால், அதனை ரஷ்யா ஏற்கவில்லை. இதனால்தான், வேறு வழியில்லாமல் ரஷ்யாவை புறக்கணித்து உள்ளனர். கூடவே, இதே காரணத்துக்காக பெலாரஸ் நாட்டையும் தடை செய்துவிட்டனர்.

ஒலிம்பிக்கில் மட்டுமல்ல, இனி நடைபெறவுள்ள சர்வதேச விளையாட்டு போட்டிகளிலும் ரஷ்யா நாட்டை சேர்ந்த வீரர்கள் பங்கேற்க முடியாது. ரஷ்யா, பெலாரஸ் நாட்டை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் நாட்டை குறிப்பிடாமல், பொதுவான வீரர்கள் என்ற பிரிவில் இவர்கள் பங்கேற்க முடியும். அப்படி பங்கேற்கும் போது, ரஷ்யா நாட்டு கொடியையோ, போருக்கு ஆதரவாகவோ எந்த சைகைகளையும் காட்ட கூடாது.

Comments