Offline
GOAT படத்தின் `ஸ்பார்க்’ பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியானது
Published on 08/04/2024 00:32
Entertainment

நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்). ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், மீனாட்சி சௌத்ரி மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் இடம் பெற்றுள்ள இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் அடுத்த பாடலுக்கான ப்ரோமோ விடியோ தற்பொழுது வெளியாகியுள்ளது.

இப்பாடலிற்கு ஸ்பார்க் என தலைப்பிட்டுள்ளனர். பாடலின் லிரிக் வீடியோவை நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இப்பாடலை யுவன் ஷங்கர் ராஜா மற்றும் விருஷா பாலி இணைந்து பாடியுள்ளனர். பாடலிற்கு கங்கை அமரன் பாடல் வரிகளை எழுதியுள்ளார்.

பாடலில் விஜய் மற்றும் மீனாட்சி சவுத்ரி இணைந்து நடனமாடியுள்ளனர். இந்த பாடலில் விஜய் மிகவும் இளல் தோற்றத்தில் ஸ்டைலிஷாகவுள்ளார். இதனால் இப்பாடலின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Comments