இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் “தங்கலான்.” மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி மற்றும் பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள தங்கலான் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து, தற்பொழுது ரிலீஸுக்கு தயாராகியுள்ளது.
இந்த நிலையில், தங்கலான் படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரிலீசாக இருக்கிறது. திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது. சமீபத்தில் வெளியான படத்தின் டிரைலரும் படத்தின் பாடலான மேனா மினிக்கி மற்றும் தங்கலான் வார் சாங் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
படம் வெளியாக இன்னும் சில வாரங்களே இருப்பதால் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர் படக்குழுவினர். படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் இன்று மாலை ஐதராபாத்தில் நடைப்பெறவுள்ளது.
சமீபத்தில் நடந்த ஒரு நேர்காணலில் ஜி.வி பிரகாஷ் தங்கலான் படத்தின் இசை தன்மையை பற்றி கூறியுள்ளார். அதில் தங்கலான் திரைப்படம் பழங்குடி மக்களின் குரல். அதனால் நான் இதில் இசையமைத்த ஒவ்வொரு பாடலிலும் எந்தளவுக்கு பழங்குடி இசையை மற்றும் மரபை கொண்டு வர முடியுமோ அவ்வளவு முயற்சி செய்து இருக்கிறேன்.
அவர்களை பற்றி நிறைய படித்து தெரிந்துக் கொண்டு , எம்மாதிரியான வாத்திய கருவிகள் அந்த காலத்தில் இருந்தது என்பதை ஆராய்ச்சி செய்து இந்த படத்தின் இசையை நான் மேற்கொண்டுள்ளேன்.
பழங்குடி இசையை இந்தியன் சினிமா பெருமளவு யாரும் பயன்படுத்தவில்லை. மலையாள சினிமா சிலர் பயன்படுத்தினாலும் தமிழ் சினிமா அதை பயன்படுத்தவில்லை. அதனால் இப்படத்தின் நான் அதை பயன்படுத்தியுள்ளேன், மிகவும் பழமை மாறாது மரபோடு இருக்க வேண்டும் என இப்படத்திற்கு இசையமைத்துள்ளேன் என்று கூறியுள்ளார்.