Offline
மூக்குத்தி அம்மன் 2ம் பாகத்தை இயக்கும் சுந்தர்.சி
Published on 08/10/2024 18:25
Entertainment

கடந்த 2020ம் ஆண்டில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா உடன் இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் ‘ மூக்குத்தி அம்மன்’. இப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பு கிடைத்தது.

ஆர்.ஜே.பாலாஜி அடுத்து நடிகை த்ரிஷாவை வைத்து ‘மாசாணி அம்மன்’ எனும் படத்தை இயக்க உள்ளதாக தகவல் வந்தது. இது மூக்குத்தி அம்மன் 2ம் பாகமாக உருவாகும் என கூறப்பட்டது. ஆனால் திடீரென வேல்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் மூக்குத்தி அம்மன் 2ம் பாகத்தில் நயன்தாரா நடிக்கிறார் என அறிவித்தனர்.

ஆனால், இந்த பாகத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்கவில்லை. இவருக்கு பதிலாக சுந்தர்.சி இப்படத்தை இயக்க உள்ளார் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

Comments