Offline
தலை நிமிர்ந்து நடங்கள் போராளியே..! – நயன்தாரா
Published on 08/10/2024 18:28
Entertainment

ஒலிம்பிக் மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இறுதிப்போட்டி இன்று இரவு நடைபெறவுள்ள நிலையில், இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அமெரிக்காவை சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட்-ஐ எதிர்கொள்ள இருந்தார்.

ஆனால், வினேஷ் போகத் உடல் எடை சில கிராம்கள் வரை கூடி இருந்ததாக அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில், ஒலிம்பிக்கில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கும் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு நடிகை நயன்தாரா ஆறுதல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “தலை நிமிர்ந்து நடங்கள் போராளியே. நீங்கள் பலரை ஊக்குவித்திருக்கிறீர்கள். உங்கள் மதிப்பு வெற்றிகளால் அளக்கப்படுவதல்ல. சாதனைகளை முறியடிக்கும் வகையிலான அன்பை நீங்கள் சேகரித்திருக்கிறீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

Comments