Offline

LATEST NEWS

வாழை' படத்தின் பாதவத்தி பாடல் வெளியானது
Published on 08/13/2024 02:15
Music

`பரியேறும் பெருமாள்' படத்தை இயக்கி தனக்கென ஒரு இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்துக் கொண்டவர் இயக்குனர் மாரி செல்வராஜ். அதைத்தொடர்ந்து தனுஷ் நடிப்பில் ''கர்ணன்' மற்றும் உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலு நடித்த 'மாமன்னன்' திரைப்படத்தை இயக்கி உள்ளார்.

மாரி செல்வராஜ் தற்பொழுது 'வாழை' என்ற படத்தை இயக்கி தயாரித்தும் உள்ளார். இப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், பிரியங்கா நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் 'வாழை' படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் 3 பாடல்கள் வெளிவந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

Comments