Offline
வில்லியாக நடிக்கும் திரிஷா?
Published on 08/26/2024 12:50
Entertainment

மவுனம் பேசியதே, சாமி, கில்லி, ஆறு, குருவி, 96 உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டவர் திரிஷா. இயக்குனர்மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் திரிஷா நடித்த குந்தவை கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இவர் அஜித்குமாருக்கு ஜோடியாக ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த நிலையில், தெலுங்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ‘விஸ்வம்பரா’, தமிழில் கமல்’தக் லைப்’ மற்றும் மலையாளத்தில் இரண்டு படங்கள் கைவசம் வைத்துள்ளார்.

தற்போது இவர் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் தயாராகும் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தினை ‘அர்ஜுன் ரெட்டி, அனிமல்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இயக்குகிறார். இந்த படத்திற்கு ‘ஸ்பிரிட்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் பிரபாஸ் நாயகன், வில்லன் என இரண்டு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதில் வில்லன் பிரபாஸுக்கு ஜோடியாக திரிஷா வில்லியாக நடிக்க உள்ளார் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.  ஏற்கனவே, இவர் ‘கொடி’ படத்தில் வில்லியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments