Offline
ரூ.120 கோடி மதிப்பில் தனி விமானம் வாங்கினாரா சூர்யா?
Published on 08/26/2024 12:56
Entertainment

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள படம் கங்குவா. இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ளஇப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். அடுத்ததாக சூர்யா தனது 44-வது படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், சூர்யா குறித்த வதந்தி ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. அதன்படி, சூர்யா ரூ.120 கோடி மதிப்பில் தனி விமானம் ஒன்று வாங்கி இருப்பதாக இணையத்தில் பரவி வருகிறது.

ஆனால், விமானம் வாங்கியதாக சூர்யா தரப்பில் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. சூர்யா தனியார் விமானம் வாங்கவில்லை என்று அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக சினிமா விமர்சகர் ஒருவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Comments