Offline
அதிக விலைக்கு “கோட்” டிக்கெட்டை விற்க கூடாது- த.வெ.க தலைமை உத்தரவு
Published on 09/02/2024 00:44
Entertainment

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் கோட் திரைப்படத்தில் நடித்துள்ளார். திரைப்படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. படத்தின் 3 பாடல்கள் இதற்கு முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் 4-வது பாடல் வெளியாகியுள்ளது.

திரைப்படம் வரும் செப்-5 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவு ஓன்றை விடுத்துள்ளது.விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் யாரும் கோட் திரைப்பட டிக்கெட்டை வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்யக்கூடாது என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமைஉத்தரவிட்டுள்ளது. கோட் திரைப்படத்திற்கான டிக்கெட் விற்பனை நேற்று ஆன்லைனில் தொடங்கிய நிலையில் இன்று உத்தரவிடப்பட்டுள்ளது.

Comments