Offline
ஜெயிலர் பட வில்லன் நடிகர் விநாயகன் கைது
Published on 09/09/2024 02:20
Entertainment

கேரளாவை சேர்ந்த பிரபல வில்லன் நடிகர் விநாயகன். ஜெயிலர் படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானார். இந்த நிலையில், ஐதராபாத் விமான நிலையத்திற்கு சென்றவிநாயகன், போதையில் விமான பாதுகாப்புப் படை வீரர்களுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

கோவா செல்வதற்காக இணைப்பு விமானத்தில் ஐதராபாத் சென்றபோது, விநாயகன்போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் ஐதராபாத் விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Comments