Offline
எ லெஜண்ட்’ படத்தில் ஏஐ மூலம் இளம் வயது ஜாக்கி சான்
Published on 09/24/2024 03:57
Entertainment

நடிகர் ஜாக்கி சான் நடித்துள்ள படம் ‘எ லெஜண்ட்’ (‘தி மித் 2′). 2005-ம் ஆண்டு வெளியான ‘தி மித்’, 2017-ல் வெளியான ‘குங்ஃபூ யோகா’ படங்களின் தொடர்ச்சியாக இது உருவாகி இருக்கிறது.

ஸ்டான்லி டாங் இயக்கியுள்ள இதில் ஜாக்கிசானுடன், லே சாங், நா ஜா, ஆரிஃப் லீ, லி சென்,பெங் சியோவ்ரான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இதில் அகழ்வாராய்ச்சி நிபுணர் மற்றும் ஏ.ஐ (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இளம் வீரர் என 2 மாறுபட்ட பாத்திரங்களில் ஜாக்கி சான் நடித்துள்ளார். பரபர சண்டைகள், சாகசங்கள், கற்பனைக்கு எட்டாத காட்சிகள் என இப்படம் உருவாகியுள்ளது. இந்தப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது.

Comments