Offline
வேட்டையன் : ரஜினிக்கு குரல் கொடுக்கும் மனோ
Published on 09/26/2024 02:39
Entertainment

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய சினிமாவின் பிரபல பின்னனி பாடகர் மனோ. சில படங்களில் நடித்தும் உள்ளார்.

இது அல்லாமல் தமிழில் இருந்து தெலுங்கு மொழியில் டப்பிங் செய்யப்படும் படங்களுக்கு பின்னனி குரல் கொடுத்துள்ளார். குறிப்பாக முத்து படத்திலிருந்து கடைசியாக ரஜினி நடித்து வெளிவந்த ஜெயிலர் படத்தின் தெலுங்கு டப்பிங் படங்களுக்கு ரஜினிக்கு மனோ தான் குரல் கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் ‘வேட்டையன்’. அமிதாப் பச்சன், மஞ்சுவாரியர், ராணா, பஹத் பாசில், துஷாரா விஜயன் என ஏகப்பட்ட திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அக்., 10ல் வெளியாகும் இந்த படத்தின் தெலுங்கு பதிப்பில் ரஜினிக்கு டப்பிங் குரல் கொடுத்து பேசியுள்ளார் மனோ.

Comments