ஜகார்த்தாவில் 59 வயது ஆடவர் தன்னை விட மிகவும் வயது குறைந்தவரான 26 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டது பற்றிய வீடியோ பதிவு டிக்டாக்கில் வைரலானது. மாப்பிள்ளைக்கும் மணப்பெண்ணுக்கும் சுமார் 30 வயது வித்தியாசமே காரணமாகும். ஆனால் இந்த வயது வித்தியாசம் அவர்கள் குடும்ப வாழ்வில் இணைவதை தடுக்கவில்லை.
திருமண நிச்சயதார்த்தம் நடந்த சமயம் தந்தை தனது மருமகனுக்கு எதிராக அமர்ந்திருந்த காட்சியும் வெளியானது. ஏனெனில் மணமகனை விட மாமனாருக்கு வயது குறைவாகும். எனக்கு இப்போது தான் 55 வயதாகிறது. ஆனால் என் மருமகனுக்கோ 59 வயதாகிறது என்று சுமிரான் கூறினார்.
நேற்று முன் தினம் வரை இந்த வீடியோ பதிவை 658,400க்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். மாப்பிள்ளைக்கு 59 வயதானாலும் பார்ப்பதற்கு இளமையாக தான் உள்ளார் என்று சிலர் பதிவிட்டனர். திருமண வாழ்வில் வயது வித்தியாசம் முக்கியமல்ல. மகிழ்ச்சியான வாழ்க்கை தான் முக்கியம் என பதிவிட்டனர்.