Offline
பெங்களூருவில் பெண்ணை கொன்று பிரிட்ஜில் வைத்த கொலையாளி ஒடிசாவில் தற்கொலை
Published on 09/27/2024 02:17
News

பெங்களூரு: பெங்களூருவில் பெண்ணை கொன்று துண்டுதுண்டாக்கி பிரிட்ஜில் வைத்த கொலையாளி ஒடிசாவில் சடலமாக மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடக மாநிலம், பெங்களூரு, வையாலி காவலில், வீரண்ணா பவன் அருகில் பூட்டியே கிடந்த வீட்டிலிருந்து சில நாட்களாக துர்நாற்றம் வீசியது. தகவலறிந்த  போலீஸார்  கடந்த 22-ம் தேதியன்று பூட்டை உடைத்து உள்ளே சென்று சோதனை நடத்தியதில், வீட்டில் பிரிட்ஜிலிருந்தே துர்நாற்றம் வந்தது.பிரிட்ஜை திறந்து பார்த்த  போலீஸார் அதிர்ச்சி.

பிரிட்ஜ் உள்ளே துண்டு, துண்டாக வெட்டப்பட்ட பெண்ணின் உடல் இருந்தது. அது மஹாலட்சுமி, 29 என்பதும் தெரிய வந்தது.

போலீஸார் நடத்திய விசாரணையில் கொலையான பெண் வட மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும், ஷாப்பிங் மால் ஒன்றில் பணியாற்றி வருவதும், திருமணமாகி, ஒரு குழந்தையும் உள்ளது. கணவரிடம் இருந்து பிரிந்து, கடந்த ஆறு மாதங்களாக பெங்களூரு வாடகை வீட்டில், தனியாக வசித்து வந்துள்ளதும் தெரியவந்தது.

போலீஸார்  வழக்குப்பதிவு செய்து முக்தி ரஞ்சன் ராய் என்பன் தான் கொலையாளியை என கண்டறிந்து அவனை தேடிவந்த நிலையில் ஒடிசாவில் பஹாத்ராக் மாவட்டத்தில் கொலையாளி சடலமாக மீட்கப்பட்டான். அவன் தற்கொலை செய்து கொண்டதாக ஒடிசா போலீஸார் தெரிவித்தனர்.

Comments