மாரா சிற்றுண்டி சாலையில் உணவு உண்ட 48 மாணவர்களுக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டது. அவர்களில் 6 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மலாக்காவில் உள்ள மாரா ஜூனியர் அறிவியல் கல்லூரியின் சிற்றுண்டி சாலை மூடப்பட்டுள்ளது.
மாரா தலைவர் அஸ்ரப் வாஜ்டி டுசுகி, இதுகுறித்து சுகாதார அமைச்சகம் விசாரணை நடத்தி வருவதாகவும், சிற்றுண்டி சாலை மூடுவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
கல்லூரிக்கு சென்று பார்வையிட்டதாகவும், ஆசிரியர்கள் அலுவலகம், கழிப்பறைகள் உள்ளிட்ட வசதிகள் சீரமைக்கப்படாமல் உள்ளதாகவும் அஸ்ரப் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். நான்கு அடிப்படை வசதிகளுக்கான மராமத்து பணிகளுக்கு ஒப்புதல் அளித்து, இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண, தலைமையாசிரியர் மற்றும் நிர்வாகத்திற்கு ஒரு மாத கால அவகாசம் அளித்துள்ளதாக அவர் கூறினார்.