Offline
போலீசாரை பாராங் கத்தியால் தாக்க முயன்ற திருடர்கள் இருவர் சுட்டுக் கொலை!
News
Published on 09/28/2024

நிபோங் தெபால்:

பினாங்கு மாநிலத்தில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக நம்பப்படும் இரு வியட்நாமிய ஆடவர்கள் இன்று அதிகாலை போலீசாரை பாராங் கத்தியால் தாக்க முயன்றபோது, சுட்டுக்கொல்லப்பட்டனர்.

“இன்று அதிகாலை 3.20 மணியளவில் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் சுற்றுக்காவலில் ஈடுபட்டபோது, நிபோங் தெபாலின் புக்கிட் பாஞ்சோரில் உள்ள தொழிற்சாலையில் இருந்து குறித்த இரு ஆடவர்கள் தப்பி ஓடினர் என்று பினாங்கு மாநில காவல்துறைத் தலைமை அதிகாரி ஹம்சா அமாட் செய்தியாளர்களிடம் கூறினார்.

“அதிகாரிகள் அவர்களை துரத்தியபோது, அவர்கள் இருவரும் போலீசாரை பாராங் கத்தியால் தாக்கினார். உடனே தற்காப்புக்காக அந்த ஆடவர்களை நோக்கி போலீஸ் அதிகாரிகள் சுட்டனர் என்றும், இதனால் 38 மற்றும் 39 வயதுடைய இரு ஆடவர்கள் கொல்லப்பட்டனர் என்றும் அவர் சொன்னார்.

“சுற்றுலா விசாவில் மலேசியா வந்த அந்த இரு வியட்நாமியர்களும் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளதாகவும், ஏராளமான வீடுகளிலும் தொழிற்சாலைகளிலும் அவ்விருவரும் கொள்ளையடித்ததாகவும் சந்தேகிக்கப்படுகிறது.

மேலும் பினாங்கு, கெடா மாநிலங்களில் மட்டும் அத்துமீறி நுழைந்து கொள்ளையடிக்கப்பட்ட 11 சம்பவங்கள் பதிவாகி உள்ளன. அந்தச் சம்பவங்களில் சுமார் 317,700 ரிங்கிட் தொகை இழப்பு ஏற்பட்டது என்றும் அவர் மேலும் கூறினார்.

Comments