Offline
Menu
மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது ADE, ஒரே நேரத்தில் 14 விமானங்கள் பழுது நீக்கம், பராமரிப்பு வசதி
Published on 09/29/2024 05:31
News

சிப்பாங்,

ஒரே நேரத்தில் 14 விமானங்கள் பழுது நீக்கம், பராமரிப்பு, முழு சோதனைக்கு உட்படுத்துவது போன்ற வசதிகளை கொண்டிருக்கும் ஏடிஈ எனப்படும் ஆசிய டிஜிட்டல் இன்ஜினியரிங் நிறுவனம் மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

சிப்பாங் அனைத்துலக விமான நிலைய அருகில் அமைந்திருக்கும் ஆசியா டிஜிட்டல் இன்ஜினியரிங்கின் விமானங்களை பழுது நீக்கம் செய்யும் இரண்டு மிகப் பெரிய கிடங்குகள் அதிகாரப்பூர்வமாக திறப்பு விழா கண்டன.

விமானம் பழுது நீக்கம் செய்யும் மலேசியாவில் மிகப் பெரிய வசதியை கொண்டிருக்கும் முதல் நிறுவனமாக திகழும் ஆசியா டிஜிட்டல் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு வருகை புரிந்த மலேசிய சாதனை புத்தக அமைப்பின் அதிகாரிகள் ஏடிஈ நிறுவனத்தின் உயர் அதிகாரிகளிடம் மலேசிய சாதனை புத்தக சான்றிதழை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் கெப்பிட்டல் ஏ நிறுவனத்தின் தலைவர் கமாருடின் மெரானூன், கெப்பிட்டல் ஏ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டான்ஸ்ரீ டோனி பெர்ணாண்டஸ், முன்னாள் துணைப் பிரதமர் துன் மூசா ஹீத்தாம் உட்பட பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Comments