Offline
5 வாகனங்களை மோதி ஒரு உயிர் பறிப்போன விபத்து
News
Published on 09/29/2024

5 வாகனங்களை மோதி ஒரு உயிர் பறிப்போன விபத்து: லோரி ஓட்டுநர் போதைப்பொருள் உட்கொண்டிருந்தது உறுதியானது

சிரம்பானில் மணல் ஏற்றிச் சென்ற லோரி, ஐந்து வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் போதைப்பொருள் உட்கொண்டிருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. நீலாய் துணை போலீஸ் தலைவர் மாட் கானி லதே கூறுகையில், பெர்சியாரன் கோல்ஃப், நீலாயில் உள்ள போக்குவரத்து விளக்கு சந்திப்பில் நேற்று இந்த விபத்து நடந்தது. 30 வயதான ஓட்டுநரின் சிறுநீர் மாதிரியில் மெத்தம்பேட்டமைன் இருப்பது உறுதியானது என்றார்.

அந்த நபர் அக்டோபர் 1 ஆம் தேதி வரை நான்கு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த வழக்கு சாலை போக்குவரத்து சட்டம் 1987 இன் பிரிவு 44 (1) இன் கீழ் விசாரிக்கப்படுகிறது என்று அவர் இன்று பெர்னாமாவிடம் கூறினார். மாலை 3.45 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் 31 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். விபத்தில் சிக்கிய லோரி ஓட்டுநர் உள்ளிட்ட  4 பேருக்கு காயம் ஏற்படவில்லை. முதற்கட்ட விசாரணையில், லோரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சமிஞ்சை விளக்கில் நின்று கொண்டிருந்த 5 கார்கள் மீது மோதியது.

Comments