Offline
Menu
காரோட்டியாக வந்த ஜோகூர் மந்திரி பெசார்
Published on 09/29/2024 05:38
News

குளுவாங்:

குளுவாங், மக்கோத்தா சட்டமன்ற தொகுதி இடைதேர்தல் வாக்கு சாவடிக்கு தங்களை ஏற்றிச்செல்ல வந்த காரில் ஏறிய வயதான கணவன்-மனைவி திடுக்கிட்டனர்.

அந்த புரோட்டன் X50 ரகக் காரை ஓட்டி வந்தவர் ஜோகூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹஃபிஸ் காஸி என்பதை அறிந்து மகிழ்ச்சியில் திகைத்தனர் ஸுரியா சாஹாட் (வயது 60), அவரின் கணவர் அப்துல் அஸிஸ் ஓஸ்மான் ஆகிய இருவரும்.

மாநில மந்திரி பெசாரே தங்களை ஏற்றிச் செல்ல தங்கள் வீட்டிற்கு வருவார் என்று எதிர்பார்க்கவே இல்லை என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

இந்த நாள் எங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத ஓர் அற்புதமான நாள் என்று அந்த வயோதிக தம்பதியர் தெரிவித்தனர்.

எல்லாத் தேர்தல்களிலும் நாங்கள் எங்கள் ஜனநாயக கடமையை மறவாமல் நிறைவேற்றியிருக்கிறோம். இருப்பினும் மக்கோத்தா சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல் நினைவலை எங்கள் இதயத்தில் ஆழமாக பதிந்திருக்கும் என்று ஸுரியா கூறினார்.

உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த ஸுரியாவை சக்கரவண்டியை வரவழைத்து வாக்குச் சாவடிக்கு அனுப்பி வைத்தார் மந்திரி பெசார்.

இதனை தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் ஓன் ஹஃபிஸ் பதிவிட்டிருந்தார்.

Comments