கோலாலம்பூர்:
மக்காவ் மோசடியில் வீழ்ந்த மூதாட்டி ஒருவர் ரொக்கம் மற்றும் நகைகள் என சுமார் RM600,000 க்கு மேல் ஏமாற்றப்பட்டார்.
நேற்று வெள்ளிக்கிழமை (செப். 27) குறித்த சம்பவம் தொடர்பாக 72 வயதுப் பெண்மணி ஒருவர் புகாரளித்ததாக புக்கிட் அமான் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறையின் (சிசிஐடி) இயக்குநர் ஆணையர் டத்தோஸ்ரீ ராம்லி முகமட் யூசுப் கூறினார்.
பாதிக்கப்பட்ட, அந்த ஓய்வு பெற்ற பெண்மணியை, அவரது தொலைபேசி எண் பல சைபர் குற்றங்களில் பயன்படுத்த்தப்பட்டிருப்பதாக கூறி, மோசடி செய்பவர்கள் செப்டம்பர் 20 ஆம் தேதி அன்று அவருக்கு அழைப்பு வந்தது.
பின்னர் பாதிக்கப்பட்ட மூதாட்டி சட்டவிரோத பணமோசடியிலும் ஈடுபட்டுள்ளார் என்று கூறி, “போலீஸ் அதிகாரி” என்று கூறப்பட்ட ஒருவருக்கு அந்த அழைப்பு அனுப்பப்பட்டது.
“அவர்கள் கூறப்படும் விசாரணைக்காக, பாதிக்கப்பட்ட பெண் தனது சேமிப்பு அனைத்தையும் ஒரு வங்கிக் கணக்கில் ஒருங்கிணைக்க வேண்டியிருந்தது. பின்னர் வங்கி விவரங்களை ‘காவல்துறை’ எனக் கூறப்பட்டவர்களிடம் ஒப்படைக்கும்படி கூறப்பட்டது.
“மோசடிக்காரர்கள் அபெண்ணின் நகைகள் மற்றும் தங்கக் கட்டிகளை அவரது வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்ட ஒரு நியமிக்கப்பட்ட நபரிடம் ஒப்படைத்துள்ளனர். மொத்தத்தில், பாதிக்கப்பட்டவர் சுமார் RM670,994 பணம், நகைகள் மற்றும் தங்கத்தை இழந்தார்,” என்று அவர் கூறினார்.
2021 முதல் 2023 வரை ஆன்லைன் மோசடிகளுக்கு 86,266 பேர் பலியாகியுள்ளனர் என்று ஆணையர் ரம்லி கவலை தெரிவித்தார்.