உடற்பேறு குறைந்த வெளிநாட்டுப் பிச்சைக்காரர்கள் தங்களின் இந்த குறையை காட்டி பிச்சை எடுத்து மாதம் ஒன்றுக்கு 10 ஆயிரம் ரிங்கிட்டிற்கு மேல் சம்பாதிக்கின்றனர் என்பது தான் அந்த அதிர்ச்சி தகவல்.
சீன நாட்டைச் சேர்ந்த நான்கு பிச்சைக்கார்கள் ஜோகூர் பாருவை சுற்றி தனித் தனியாக மேற்கொள்ளப்பட்ட ஒரு சோதனை நடவடிக்கையில் கைது செய்யப்பட்டனர்.
இவர்களை பிச்சை எடுக்க வைத்து ஒரு கும்பல் சம்பாதிப்பது வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது. மலேசியர்களின் இளகிய மனதையும் தாராளத்தையும் இந்த கும்பல் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு இவர்களை பிச்சை எடுக்க வைத்திருக்கிறது.
வெளிநாட்டுப் பிரஜைகள் பிச்சை எடுக்கின்றனர் என்ற பொதுமக்களின் புகாரைத் தொடர்ந்து கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் தீவிர கண்காணிப்புக்கு பின்னர் 2024 செப்டம்பர் 23, 24 ஆகிய இரு தினங்கள் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் இவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று ஜோகூர் மாநில குடிநுழைவு இலாகா ஓர் அறிக்கையில் தெரிவித்தது