Offline
பூஜையுடன் தொடங்கிய சசிகுமார் – சிம்ரன் நடிக்கும் புதிய படம்
Published on 09/30/2024 18:26
Entertainment

சுப்ரமணியபுரம்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சசிகுமார். அதன் பின்னர், இயக்கத்தை கைவிட்டு நடிப்பில் முழு கவனத்தையும் செலுத்தினார்சசிகுமார். பின்னர் இவரது நடிப்பில் வெளியான ‘நாடோடிகள், சுந்தரபாண்டியன், குட்டி புலி’ போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

மேலும் சமீபத்தில் வெளியான ‘கருடன்’ படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்தன. இதற்கிடையில், கடந்த 20-ந் தேதி ‘நந்தன்’ படம் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் சசிகுமார் இதுவரை நாம் பார்த்திராத தோற்றத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் வலியைப் பேசும் படமாக உருவான இதில் கவனம் ஈர்க்கும்படியான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இந்தநிலையில் தற்போது சசிகுமார், ‘குட் நைட் மற்றும் லவ்வர்’ படங்களைத் தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.இப்படத்தை அறிமுக இயக்குனர் அபிஷன் இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜை சென்னையில் நடைபெற்றது. மேலும், நடிகை சிம்ரன் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இது குறித்த பதிவை தயாரிப்பு நிறுவனம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.

Comments