Offline
2 இடங்களில் துப்பாக்கிச்சூடு 15 பெண்கள் உட்பட 17 பேர் பலி
Published on 09/30/2024 18:30
News

ஜோக்கன்ஸ்பர்க்: தென் ஆப்ரிக்காவில் இருவேறு இடங்களில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களில், 15 பெண்கள் உட்பட 17 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்; ஒருவர் படுகாயமடைந்தார்.

தென் ஆப்ரிக்காவில் கிழக்கு கேப் மாகாணத்தின் லுசிகிஸ்கி நகரில் உள்ள இரண்டு வீடுகளில், நேற்று முன்தினம் இரவு அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அரங்கேறியதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி, அங்கு சென்று  போலீஸார் ஆய்வு செய்தனர்.

இதில், ஒரு வீட்டில் 12 பெண்கள் உட்பட 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதே பகுதியில், மற்றொரு வீட்டில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் மூன்று பெண்கள் உட்பட நான்கு பேர் சுட்டுக்கொல்லப்பட்டது தெரியவந்தது.

படுகாயங்களுடன் மீட்கப்பட்ட ஒருவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது நிலையும் கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இறந்தவர்களின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீஸார், இதுகுறித்து தனித்தனியே வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments