தனது தாயைக் கொன்று, அவரது உடல் உறுப்புகளை சமைத்து சாப்பிட்ட மகனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மும்பை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.
2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28 ஆம் தேதி 63 வயதான தனது தாயை அவரது மகன் குச்சொரவி கொலை செய்தார். கொலை செய்ததோடு மட்டுமில்லாமல் இறந்த தாயின் உடல் பாகங்களை வெட்டி சாப்பிட்டுள்ளான். பின்னர் தாயின் இதயத்தையும் விலா எலும்புகளையும் எண்ணையில் வறுத்து சாப்பிட முயன்ற போது போலீஸார் அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த குற்றத்திற்காக 2021 ஆம் ஆண்டு குச்சொரவிக்கு கோலாப்பூர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் குச்சொரவி மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கு மும்பை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “நாங்கள் இதைவிட கொடூரமான மற்றும் காட்டுமிராண்டித்தனமான வழக்கை சந்தித்ததில்லை. குச்சொரவிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டால், அவர் மற்ற கைதிகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பார். இவரை திருத்துவதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை” என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
இறுதியாக கோலாப்பூர் நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனையை மும்பை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய குச்சொரவிக்கு 30 நாட்கள் அவகாசம் உள்ளது.