Offline
Touch n Go அட்டை செயல்படவில்லை; டோல் சாவடியில் குத்திக்கொண்ட இருவர்
Published on 10/02/2024 13:35
News

தன்னுடைய அடையாளக் கார்டுடன் இணைக்கப்பட்டிருந்த Touch n Go கார்டு வேலை செய்யாததால் எரிச்சலடைந்த ஓர் ஆடவர் டோல் வசூலிப்பாளரை குத்தினார். பதிலுக்கு டோல் வசூலிப்பாளரும் அந்நபரை குத்தினார்.

இச்சண்டையை காட்டும் வீடியோ எக்ஸ் தளத்தில் வைரலானது. கடந்த செப்டம்பர் 29 ஆம் தேதி பிற்பகல் 1.15 மணியளவில் ஜோகூர், பெர்லிங் டோல் சாவடியில் இச்சம்பவம் நிகழ்ந்தது.

மாறி மாறி பலமாக குத்திக் கொண்ட இவ்விருவரையும் வழிப்போக்கர்கள் தலையிட்டு விலக்கிவிட்டனர்.

உள்நாட்டவர்களான 30 வயதிலான அந்த இருவரும் சம்பவம் குறித்து போலீஸில் புகார் செய்திருப்பதை ஜோகூர் பாரு வடக்கு மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பல்வீர் சிங் மஹின்டர் சிங் உறுதிபடுத்தினார்.

Comments