வாகனப் போக்குவரத்து நெரிசல், மக்கள் நடமாட்டம் மிக்க பகுதில் சட்டத்திற்குப் புறம்பாக ஒரு காரை நிறுத்தி வைத்தால் என்ன களேபரம் நடக்கும் என்பதை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.
கோலாலம்பூரின் மையப்பகுதியான பெட்டாலிங் ஸ்திரிட்டில் ஒருவர் தன்னுடைய SUV வாகனத்தை சட்டத்திற்கு புறம்பாக சாலை சந்திப்பில் நிறுத்தி வைத்ததால் அங்கு மிகக் கடுமையான வாகனப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனமோட்டிகள் திணறினர்.
ரெப்பிட் கே.எல். பஸ் ஒன்று அப்பகுதியில் இருந்து வெளியேறுவதற்கு பெரும் சிரமத்தை எதிர் நோக்கியது. மிகவும் குறுகலான பாதையில் மெல்ல ஊர்ந்து சென்று வெளியேறியது.
பொது மக்கள் ஒன்றிணைந்து அந்த பஸ் அங்கிருந்து வெளியேறுவதற்கு பெரிதும் உதவியது குறிப்பிடத்தக்கது.
அப்போது அங்கு திரண்டிருந்த பொது மக்கள் ஆரவாரமாக கை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இவ்வளவு களேபரத்திற்கு மத்தியில் SUV வாகன உரிமையாளர் அங்கு வரவே இல்லை. மன்னிப்பும் கேட்கவில்லை.
இந்த சம்பவம் 46 வினாடி கணொலி வழி தீயாகப் பரவியிருந்தும் அந்த வாகனமோட்டி கொஞ்சமும் கண்டுக்கொள்ளவில்லை. இதனால் சினமுற்ற நெட்டிஸன்கள் கடுமையான விமர்சனங்களால் வறுத்தெடுத்தனர்.