கோல திரெங்கானு:
தொலைபேசி மோசடி கும்பலால் ஏமாற்றப்பட்ட ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் தனது சேமிப்பில் RM201,900 ஐ இழந்தார்.
கடந்த ஆகஸ்ட் 31 அன்று, பாதிக்கப்பட்ட 65 வயதுப் பெண்மணிக்கு, அம்பாங் மருத்துவ மையத்தின் ஊழியர் எனக் கூறி ஒரு தனிநபரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது என்று கோலா திரெங்கானு மாவட்ட காவல்துறைத் தலைவர் ACP அஸ்லி முஹமட் நூர் கூறினார்.
சென்டரிங் பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்டவருக்கு RM68,800 தொகையில் இன்சூரன்ஸ் க்ளைம் இருப்பதாக சந்தேக நபர் தெரிவித்ததாக அவர் கூறினார்.
“தனிப்பட்ட தகவல்களை தவறாகப் பயன்படுத்தியதாக காவல்துறையில் புகார் அளிக்கும்படி பாதிக்கப்பட்ட பெண்ணிடம் சந்தேக நபர் கேட்டுக்கொண்டார்.
“இருப்பினும், செப்டம்பர் 24 அன்று, சந்தேக நபர் பாதிக்கப்பட்ட பெண்ணைத் தொடர்பு கொண்டு, பேங்க் நெகாரா மலேசியாவின் கண்காணிப்பு நோக்கத்திற்காக, RM5,000 வைப்புத்தொகையுடன் அக்ரோ வங்கியில் ஒரு கணக்கைத் திறக்கும்படி அறிவுறுத்தினார்,” என்று அவர் இன்று வெளியிடுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
பின்னர், சந்தேக நபர் பாதிக்கப்பட்ட பெண்ணின் ஹஜ் நிதிக் கணக்கிலிருந்து புதிதாக திறக்கப்பட்ட அக்ரோ வங்கிக் கணக்கிற்கு ரிம201,900 பணத்தை மாற்றுமாறு அறிவுறுத்தியதாக அஸ்லி கூறினார்.
நேற்று அக்ரோ வங்கியில் இருப்புத்தொகையை சரிபார்க்கச் சென்ற மகன், அக்கணக்கில் பணம் இல்லை என்று தெரிவித்த பின்னரே, பாதிக்கப்பட்ட பெண்மணி தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.
“பாதிக்கப்பட்டவரின் வங்கி கணக்கில் இருப்பு RM100 மட்டுமே இருந்தது, பாதிக்கப்பட்டவரின் குறித்த கணக்கில் இருந்து தெரியாத வங்கிக் கணக்கிற்கு 20 பரிவர்த்தனைகள் நடந்திருப்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டது என்று அவர் மேலும் கூறினார்.