சிங்கப்பூர் வாணிபம், தொடர்பு, போக்குவரத்து துறை முன்னாள் அமைச்சர் எஸ். ஈஸ்வரனுக்கு நீதிமன்றம் இன்று 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
12 ஆண்டுகள் அமைச்சராக இருந்த ஈஸ்வரன் நீதியை நிலைநாட்டுவதற்கு இடையூறாக இருந்தது, கிட்டத்தட்ட 1.26 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள விலை உயர்ந்த அன்பளிப்புகள் மேலும் பரிசு பொருட்களை பெற்று கொண்டதன் வழி பதவியை தவறாகப் பயன்படுத்தியதற்கு இத்தண்டனை விதிக்கப்பட்டது.
தூய்மையான, கட்டுக்கோப்பான அரசாங்கம் என பெயர் பெற்ற சிங்கப்பூரில் ஓர் அமைச்சர் சிறைக்கு அனுப்பப்படுவது அதன் வரலாற்றில் இதுதான் முதல் முறை.
இக்குற்றங்களுக்கு 6 முதல் 7 மாதங்கள் வரையிலான சிறை தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று பிராசிகியூஷன் தரப்பு வாதிட்டது.
ஆனால் நீதிபதி வின்சன்ட் ஹூங் முன்னாள் அமைச்சர் ஈஸ்வரனுக்கு மிகக் கடுமையான 12 மாதங்கள் சிறை தண்டனை விதித்தார்.