Offline
ரஜினியின் ‛வேட்டையன்’ படத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
Published on 10/04/2024 00:29
Entertainment

ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள வேட்டையன் படம் வருகிற 10ம் தேதி திரைக்கு வருகிறது.

நேற்று இப்படத்தின் டிரைலர் வெளியான நிலையில், இப்படம் என்கவுன்டர் பற்றி பேசும் படம் என்பது தெரிய வந்திருக்கிறது. இந்த நிலையில் வேட்டையன் படத்தை வெளியிட தடை கோரி, பழனிவேல் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருக்கிறார்.

அவர் தாக்கல் செய்த அந்த மனுவில், வேட்டையன் படத்தில் இடம் பெற்றிருக்கும் என்கவுன்டர் சம்பந்தப்பட்ட வசனங்களை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது படத்திற்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்த நீதிமன்றம், லைகா நிறுவனம் மற்றும் சென்சார் போர்டு விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்தி வைத்தார்.

Comments